Discoverஎழுநாகொத்தடிமை முறைமைகளும் எதிர்க்குரல்களும் | கண்டி சீமை | இரா.சடகோபன்
கொத்தடிமை முறைமைகளும் எதிர்க்குரல்களும் | கண்டி சீமை | இரா.சடகோபன்

கொத்தடிமை முறைமைகளும் எதிர்க்குரல்களும் | கண்டி சீமை | இரா.சடகோபன்

Update: 2022-12-06
Share

Description

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் நிர்வாகத்தில் பல ஜனநாயக அம்சங்கள் புகுத்தப்பட்டன. அதற்காக கல்விகற்ற இலங்கையர்கள்  உரத்துக் குரல் கொடுத்திருந்தனர். இதற்கு முன்னர், ஆளுநரிடமும், படைத்தளபதிகளிடமும், ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் கரங்களிலும் இருந்த அரசியல் அதிகாரங்கள் இப்போது  மக்கள் பிரதிநிதிகளிடமும் செல்ல ஆரம்பித்தன.


ஆரம்பத்தில் 1832 ஆம் ஆண்டில் கோல்புறூக் - கமரூன் அரசியல் நிர்வாக சீர்திருத்தத்திற்குப் பின் ஆளுநரின் தனி அதிகாரம் குறைக்கப்பட்டு, கூட்டுப்பொறுப்பு ஆட்சிமுறை உருவாக்கப்பட்டது. பின் நாடு ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு பிரித்தானிய அரச அதிபர்களின் பரிபாலனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அரச நிறைவேற்று சபை மற்றும் 19 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சட்டசபை ஆகியன ஏற்படுத்தப்பட்டன.


முன்பு சட்டசபையின் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாக தோட்டத்துரைமார்கள் சமூகத்தை சேர்ந்த ஆங்கிலேயர்களே நியமிக்கப்பட்ட போதும் பின்னர் படித்த ஆங்கிலேய மோகம் கொண்ட மேட்டுக்குடி வர்த்தகர்களும் நியமிக்கப்பட்டனர். இவ்விதம் நியமிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு பறங்கியர் என்று இடம்பெற்றனர்.


இக்காலத்தில்தான் (1833) டொக்டர் கிறிஸ்தோபர் எலியட்  (Dr.Christopher Elliott) அவர்களின் தலைமையில் உள்ளூர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த ‘தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்' தேவை என்ற கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டது. இவர் ஒரு எழுத்தாளராகவும், மருத்துவராகவும் இருந்ததுடன்  "இலங்கையின் நண்பர்கள்" என்ற இயக்கத்தையும் உருவாக்கியிருந்தார்.


(1924) இலங்கையில் மொத்த இந்தியத் தமிழரின் சனத்தொகை ஒரு லட்சத்து 86 ஆயிரம் ஆகவும் தோட்டத் தொழிலாளர்களின் தொகை 6 லட்சமாகவும் இருந்த போதும், இவர்களில் வாக்காளர்களாக பதிவு செய்ய 12,901 பேர் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர். கொழும்பில் வாழ்ந்த வர்த்தகர்களும், தோட்டத்துக் கங்காணிகளும், தோட்ட உத்தியோகத்தர்களும் வாக்காளர்களாகப் பதிவுசெய்து கொண்டனர். எந்தத் தோட்டத் தொழிலாளியும் வாக்களிக்க தகுதி பெறவில்லை. இதன் பிரகாரம் 1924 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் இந்திய வம்சாவழியினர் சார்பில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்கள் ஐ. எக்ஸ். பெரேரா, முகமட் சுல்தான், கோ. நடேசய்யர், எஸ். பி. ஷண்ட்ஸ், ஐ. டேவிட்,  ஆர். ஈஸ்வரமூர்த்தி ஆகியோராவர். இவர்களிலிருந்து ஐ. எக்ஸ். பெரேரா முதலாவதாகவும், முகமட் சுல்தான் இரண்டாவதாகவும் சட்டசபைக்கு தெரிவாகினர்.

Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

கொத்தடிமை முறைமைகளும் எதிர்க்குரல்களும் | கண்டி சீமை | இரா.சடகோபன்

கொத்தடிமை முறைமைகளும் எதிர்க்குரல்களும் | கண்டி சீமை | இரா.சடகோபன்

Ezhuna